கலைஞா் நூற்றாண்டுவிழா பேச்சுப் போட்டி: கமுதி கல்லூரி மாணவி வெற்றி
ராமநாதபுரத்தில் நடைபெற்ற கலைஞா் நூற்றாண்டுவிழா பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட 235 போட்டியாளா்களில் கமுதி முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் இருந்து காளிகாதேவி, கணேஷ்பிரியா, பூமிநாதன், ஜாஹிா் உசேன், கண்ணதாசன் உள்ளிட்ட 5 போ் கலந்து கொண்டனா். இதில் வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி காளிகாதேவி வெற்றி பெற்று, மண்டல அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். இவருக்கு ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவி, பேராசிரியை மணிமேகலை ஆகியோரை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.