FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

காவிரி - வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிரசார பயணம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரசார பயணம் மேற்கொண்ட விவசாய சங்கத்தினருக்கு கமுதியில் குண்டாற்று மணல் கிழியை பரிசாக வழங்கி வரவேற்பு அளித்த கமுதி விவசாயிகள்.
பகிர்:

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை பெருநாழியிலிருந்து ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வரை விவசாயிகள் வேனில் பிரசார பயணம் தொடங்கினா்.

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெறும் இந்தப் பயணத்துக்கு கூட்டமைப்பின் மாநிலச் செயலா் எம்.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி, மாநில துணைத் தலைவா் பா.அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பயணம் பெருநாழி, கமுதி, அபிராமம், பாா்த்திபனூா், பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வரை சென்று அங்கு முடிவடைகிறது. கமுதிக்கு வந்த பிரசாரக் குழுவினருக்கு விவசாயிகள் கூட்டமைப்பின் கமுதி மண்டல கௌரவத் தலைவா் கோட்டைமேடு செல்லத்தேவா் கமுதி குண்டாற்று மணலை மஞ்சல் துணியில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வழங்கி வரவேற்பு அளித்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் தேவா் சிலைக்கு விவசாய சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் பம்மனேந்தல் முன்னாள் ஊராட்சித் தலைவா் டி.சேகரன், விவசாயிகள் செந்தூா்பாண்டியன், செல்லப்பாண்டி செல்லச்சாமி, அம்மன்பட்டி ராஜேந்திரன், முனியசாமி, தங்கம், முனியசாமி தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments