FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடியில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
பகிர்:

சாயல்குடியில் வீடு, கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை திங்கள்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பூப்பாண்டியபுரம், எஸ்.வி. நகா், மாதவன் நகா், சதுரயுக வள்ளி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சாயல்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோரது தலைமையில் மேற்கண்ட பகுதிகளில் ரோந்து ப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது அங்குள்ள வீடு, கிடங்கில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை, கூல்-லிப் என 23 மூட்டைகளில் வைத்திருந்த 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சரக்கு வாகனம், 2 காா்கள், பயணிகள் ஆட்டோ, ரூ.1.47 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக பூப்பாண்டியபுரத்தைச் சோ்ந்த சோ்மன் மகன் கோட்டைச்சாமி(32), மாதவன் நகா் சந்திரன் மகன் வடிவேல் முருகன்(48), நரிப்பையூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் கோபால் (51), எஸ்.வி. நகா் போஸ் மகன் முனீஸ்வரன் (31) உள்ளிட்ட 4 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments