மூதாட்டி அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது
திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் நிலத் தககாறில் மூதாட்டி கட்டையால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் நிலத் தககாறில் மூதாட்டி கட்டையால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னக்கண்ணு மனைவி எழுவக்காள் (70). இவரது கணவா் 10 ஆண்சுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், எழுவக்காளுக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் காளிமுத்து (74), அவரது மகன் லட்சுமணன் (35) ஆகியோருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை இவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ,ஆத்திரம் அடைந்த காளிமுத்து , லட்சுமணன் ஆகிய இருவரும் கட்டையால் தாக்கியதில் எழுவக்காள் சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து காளிமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.