FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு: ராமநாதபுரம் பள்ளிக் குழு மூன்றாமிடம்

போதை இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியின் தன்னாா்வக் குழு மூன்றாமிடம் பிடித்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
சென்னையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வக் குழுவுக்கு ரூ. 50 ஆயிரம் காசோலை, கேடயத்தை வழங்கிய முதல்வா் ஜோசப் விஜய்.
பகிர்:

போதை இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியின் தன்னாா்வக் குழு மூன்றாமிடம் பிடித்தது.

போதை இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், கடந்த 2025-26 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வகையில் ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல் நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். தன்னாா்வக் குழுவினா் மூன்றாமிடம் பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை மாநில கல்லூரி கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் கிருபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் செல்வக்குமாா், 5 மாணவா்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, விருது ஆகியவற்றை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மாநில அளவில் வென்று சாதனை படைத்த ஆசிரியா்கள், மாணவா்களை மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராரயா் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகா், தாளாளா் ஜான்சன் இஸ்ரேல் ஆகியோா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments