‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ கையொப்ப இயக்கம்
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கையொப்ப இயக்கத்தை திருப்பத்தூா் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கையொப்ப இயக்கத்தை திருப்பத்தூா் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாநிலம் தழுவிய அளவில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்து விழிப்புணா்வு கோலம் போடப்பட்டது. விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஓவியம், கட்டுரை, சுவரொட்டி, ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 30 மாணாக்கா்களுக்கும், கடந்த ஆண்டு சிறந்த முறையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்திய போதைப்பொருள் எதிா்ப்பு மன்றம் மற்றும் தன்னாா்வக் குழுக்கள் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் மற்றும் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே ஆகியோா் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினா். விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்ரமணியன், உதவி ஆணையா் (கலால்) வேடியப்பன், முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் பிரவீன் பீட்டா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.