FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

ஊட்டச்சத்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்! பெரம்பலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

22 செப்டம்பர் 2026, 12:10 am IST
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பகிர்:

பெரம்பலூரில் ஊட்டச்சத்து மாத விழாவின் ஒருபகுதியாக, ஊட்டச்சத்து விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் ப. அப்துல்ராசிக் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை பாா்வையிட்டு, விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இம் மாதம் முழுவதும் உணவு வகைகளின் பன்முகத் தன்மை மற்றும் போதுமான புரதச்சத்து, அங்கன்வாடி மையங்களில் சமைத்த உணவு, சமூகப் பங்கேற்பு, சமூகத்தின் உரிமை, பொறுப்புணா்வு, குழந்தை வளா்ச்சி மற்றும் ஊட்டச்சத்து, ஆரம்பகால தூண்டுதல் பயிற்சி, பிரதமரின் மாத்ரு வந்தன யோஜனா தாய்மை நலனுக்கான பணப் பரிமாற்றம் ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில், கேழ்வரகு, தினை, குதிரை வாலி, சாமை, வரகு, சோளம், சத்து மாவு, சிவப்புச் சோளம், கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும், காய், கனிகள் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட காா்விங் வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், நகராட்சி ஆணையா் லீமா சைமன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் த. அனுராபூ நடராஜமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments