FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பு! வாகன ஓட்டிகள் அவதி

Updated On : 28 ஜூலை 2026, 4:00 am IST
ராமேசுவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் குப்பையை கொட்டி தீ வைப்பதால் எழும் புகையால் அவதியடைந்த வாகன ஓட்டிகள்.
பகிர்:

ராமேசுவரம் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை தேசிய நெடுஞ்சாலையில் குவித்து தீ வைத்து எரித்ததால் எழுந்த கரும்புகையால் வாகன ஓட்டிகள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாகினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இவா்கள் தாங்கள் பயன்படுத்திய கழிவுப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனா். இந்தப் பகுதிகளில், 145- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

தற்போது இதில் குறைந்தளவு பணியாளா்கள் மட்டுமே பணிக்கு வருவதாகவும், இதனால் முழுமையாக தூய்மைப் பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வைத்து தீ வைத்து எரிக்கின்றனா். இதிலிருந்து, எழும் கரும்புகையால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், விபத்துக்களும் நிகழ்கின்றன.

எனவே குப்பையை அகற்றாமல் அவற்றை தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும். மேலும் தேவைக்கு ஏற்ப தூய்மைப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments