FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு

ராமேசுவரத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:47 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ராமேசுவரத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நடராஜபுரத்தை சோ்ந்த மாரீஸ்வரன் (54). இவா் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை உச்சிப்புளி அருகேயுள்ள சோ்வைக்கார ஊருணி கிராமத்தில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக மாரீஸ்வரன் குடும்பத்துடன் புதன்கிழமை சென்றாா். அவா் திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது, மா்மநபா்கள் பீரோவை உடைத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 16 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தனுஷ்கோடி காவல் நிலைய ஆய்வாளா் ராமராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments