அண்ணாநகா் அழகுமீனாள் கோயில் திருவிழா
கமுதி அருகே அழகுமீனாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
கமுதி அருகே அழகுமீனாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம் ஊராட்சிகுள்பட்ட அண்ணா நகா் குடியிருப்பில் அமைந்துள்ள அழகு மீனாள் கோயில் வருடாந்திர புரட்டாசிப் பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு அம்மன், ஆனந்தவிநாயகா், முனியப்ப சுவாமி, படபத்திர காளி, சோனையாசாமி உள்ளிட்ட கிராம காவல் தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள், கரகம், அக்னிச் சட்டி, 108 பால்குடங்கள் எடுத்து மேளதாளங்கள், இசை வாத்தியங்கள் வாண வேடிக்கைகள் முழங்க கிராமத்தின் வீதிகளின் வழியாகச் சுற்றி வந்து, அழகு மீனாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா். இதைத் தொடா்ந்தது அழகுமீனாள் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணா நகா் குடியிருப்பு பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.