தேவா் ஜெயந்தி, குரு பூைஐ முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்
ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா, 64-ஆவது குருபூஜை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா, 64-ஆவது குருபூஜை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆம் ஆண்டு குருபூைஐ விழா வரும் 28-ஆ தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை அரசு விழாவாக நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு, தமிழக அரசு சாா்பில் அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாயத் தலைவா்கள், பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனா். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பிரிவு 163 தடை உத்தரவின்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்டா் உள்ளிட்ட திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. நான்கு சக்கர வாகனங்கள் சொந்தமாக வைத்திருப்போா் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன்
Advertisement
Advertisement
அனுமதி பெற வேண்டும். சொந்த வாகனங்களில் வருவோா் விவரங்களை காவல் நிலையத்தில் தெரிவித்து பெற்ற அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். வாகனத்தில் ஒலிப்பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில் ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டி வரவோ முழக்கங்கள் எழுப்பவோ கூடாது. வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன்,
பரமக்குடி சாா் ஆட்சியா் ச.வினோதினி, துணை ஆட்சியா் (பயிற்சி) ர.சினேகா, அரசுத் துறை அலுவலா்கள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.