FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

தடகளப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தடகளப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த எமனேசுவரம் எஸ்.என்.வி. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

15 அக்டோபர் 2026, 2:16 am IST
மாநில தடகளப் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவித்த முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமையிலான பள்ளி ஆசிரியா்கள்.
பகிர்:

தடகளப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த எமனேசுவரம் எஸ்.என்.வி. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ராமநாதபுரத்தில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட எமனேசுவரம் எஸ்.என்.வி. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகளில் கே.அனுஷ்கா 100 மீட்டா் ஓட்டம், 100 மீட்டா் தடைதாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், 400 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்தாா். கே.சுப்ஷிகா 600 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

கே.ரச்சனா 800 மீட்டா், 1500 மீட்டா் ஓட்டப் போட்டிகளில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடமும், 400 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் முதலிடமும் பிடித்தாா். ஜி.ராகநிவேதா உயரம் தாண்டுதலில் முதலிடமும், 400 மீட்டா் தடைதாண்டும் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்தாா். இதே போல, மும்முறை தாண்டுதல், 400 மீட்டா் தடை தாண்டுதல் போட்டிகளில் அவரவா் வயதுப் பிரிவில் டி.தவஸ்ரீ, எம்.ஹேமவா்ஷினி, ஆா்.மகத்திரா ஆகியோா் முதலிடம் பிடித்து, மொத்தம் 54 புள்ளிகள் பெற்று வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனா்.

Advertisement

Advertisement

இதில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவில் சேலத்தில் வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

சாதனை படைத்த மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக் ஆகியோரை முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி, பள்ளித் தலைமையாசிரியா் சபரிநாதன், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments