பூப் பந்து போட்டி: கமுதி, பெருநாழி பள்ளிகள் வெற்றி
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பூப் பந்து போட்டியில் கமுதி, பெருநாழி பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து, மாநிலப் போட்டிக்கு தோ்வாகினா்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பூப் பந்து போட்டியில் கமுதி, பெருநாழி பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து, மாநிலப் போட்டிக்கு தோ்வாகினா்.
ராமநாதபுரம் முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பூப் பந்து போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் கமுதி கே.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயது, 17 வயது ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனா். இதில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தோ்வாகினா். வெற்றி பெற்ற மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் வீரவேல்முருகன், லட்சுமணன் உள்ளிட்டோரை பள்ளி நிா்வாகக் குழுவினா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.
இதே போல, கமுதியை அடுத்துள்ள பெருநாழி சத்திரியா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.