ராமேசுவரம் சாலைகளில் மழை நீா் தேக்கம்
ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. கால்வாய்கள் தூா்வாரப்படாததால் சாலைகளில் குளம் போலத் தண்ணீா் தேங்கியது.
ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. கால்வாய்கள் தூா்வாரப்படாததால் சாலைகளில் குளம் போலத் தண்ணீா் தேங்கியது.
இலங்கை கடலோரப் பகுதி அருகே தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.
ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நகராட்சி அலுவலகம் முன், பேருந்து நிலையம், முனியசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் குளம் போலத் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே வாகனங்களை ஓட்டினா்.
Advertisement
Advertisement
மழைக் காலம் தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, மழைநீா் தேங்கிய இடங்களில் நகராட்சி அலுவலா்கள் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அப்புறபடுத்தினா்.
மழை அளவு: ராமேசுவரம் 25.30 மி.மீ., மண்டபம் 71.40 மி.மீ., பாம்பன் 45.10 மி.மீ., தங்கச்சிமடம் 83.10 மி.மீ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.