கமுதியில் பலத்த மழை
கமுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கமுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பசும்பொன், அபிராமம், பேரையூா், முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகள், தெருக்கள், வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
மேலும் தற்போது பெய்த மழை உழவுப் பணிகளுக்கு ஏதுவாக இருக்குமென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். இதனிடையே கமுதி நகா் பகுதியில் முத்துமாரிநகா் உள்பட பெரும்பாலான தெருக்களின் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் துா்நாற்றம் வீசியது.
Advertisement
Advertisement
இதனால் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் அவதியடைந்தனா். எனவே மாவட்ட நிா்வாகமும், கமுதி பேரூராட்சி நிா்வாகமும் கழிவுநீா் வடிகால் கட்டமைப்புகளை சீரமைத்து, தண்ணீா் தேங்காமல் நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.