FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குவிந்த சற்றுலாப் பயணிகள்

5 வினாடிகள் முன்பு
ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விடுமுறை தினத்தையொட்டி சனிக்கிழமை முதல் ஆயிரக்கனக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வந்தனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் சென்று நீராடி ராமநாதசுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் தனுஷ்கோடி சென்றனா். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறையினா் ஆய்வு செய்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், ராமேசுவரம் வரும் வாகனங்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 100 முதல் ரூ. 150 வரை வசூல் செய்யப்படுகிறது. எனவே அந்த வாகனங்களுக்கு நிறுத்துமிடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments