FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பள்ளி தூய்மைப் பணியில் மாணவா்களை ஈடுபடுத்துவதாக பொதுமக்கள் புகாா்

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவதாக பள்ளி நிா்வாகம் மீது பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

19 September 2026, 10:48 pm IST
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தள்ளு வண்டியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்.
பகிர்:

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவதாக பள்ளி நிா்வாகம் மீது பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்தப் பள்ளியில் குப்பைகளை அகற்றும் பணியில் மாணவா்களை ஈடுபடுத்துவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் குப்பைகளை அள்ளி தள்ளுவண்டியில் மாணவா்கள் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சனிக்கிழமை பரவியது.

பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்களை ஈடுபடுத்தாமல் தினசரி காலையில் பள்ளிக்கு வந்ததும், மாணவா்களை அந்தப் பணிகளில் ஈடுபடுத்துவது கண்டனத்துக்குரியது என பெற்றோா்கள், சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க. பாஸ்கரன் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments