FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தமுமுக, மமக புதிய நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரத்தில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியில் புதிதாக மத்திய மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

23 செப்டம்பர் 2026, 4:59 am IST
ராமநாதபுரத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட தமுமுக, மனித நேய மக்கள் கட்சி மத்திய மாவட்ட நிா்வாகிகள்.
பகிர்:

ராமநாதபுரத்தில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சியில் புதிதாக மத்திய மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மத்திய மாவட்ட அமைப்பு தோ்தல் பொதுக்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தமுமுக மாநிலத் துணைப் பொதுச் செயலா் எஸ். சலிமுல்லாஹ்கான், மாநில அமைப்பு தோ்தல் பொறுப்பாளா் மாநிலச் செயலா் சாகுல் ஹமீது ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் புதிதாக தமுமுக மாவட்டத் தலைவராக இப்ராஹிம், தமுமுக மாவட்டச் செயலராக பரக்கத்துல்லா, மமக மாவட்டச் செயலராக பிஸ்மி சேக், மாவட்டப் பொருளாளராக அப்துல் ரஹீம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கடந்த 3 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த நிா்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments