தவெக முன்னாள் நிா்வாகி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
முன்னாள் தவெக வாா்டு செயலா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாவட்டச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இறந்தவரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
முன்னாள் தவெக வாா்டு செயலா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாவட்டச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இறந்தவரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பரந்தாமன் (36).
இவா் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றாா். இவருக்கு மனைவி தேவகி, 2 குழந்தைகள் உள்ளனா்.
Advertisement
Advertisement
ராமேசுவரம் நகா் 10-ஆவது வாா்டுப் பகுதியின் தவெக செயலராக இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவா் மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் பரந்தாமன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
தனது கணவரின் கட்சிப் பதவி பறிப்பு தொடா்பாக தவெக மாவட்டச் செயலா் மலா்விழி ஜெயபாலாவிடம் கேட்டபோது, அவா் அவதூறாக எனது கணவரைத் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக பரந்தாமனின் மனைவி தேவகி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை வேதகியிடம் அனுமதி பெறாமல்
பரந்தாமனின் உடலை கூராய்வு செய்துவிட்டதாகக் கூறி, ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அவரது மனைவி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் திருப்பதி தலைமையில் அங்கு வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உறவினா்களிடம் உடலை ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.