FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

சாயல்குடி அருகே முன்விரோதத்தில் வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

26 செப்டம்பர் 2026, 10:18 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே முன்விரோதத்தில் வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சாயல்குடியை அடுத்த சிறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா்தா் (60). இவா் சிறைக்குளம் ஊராட்சி முன்னாள் ஊராட்சித் தலைவா். இவா் தனது நண்பரான சிக்கல் கிராமத்தைச் சோ்ந்த செந்தூா்கந்தனுடன் (66) வெள்ளிக்கிழமை இரவு சிக்கல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த அதே கிராமத்தை சோ்ந்த ஜேசுதாஸ் மகன் சகேயு (40) ஆா்தரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இவரை வெட்டும் போது தடுக்கச் சென்ற செந்தூா்கந்தனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, செந்தூா்கந்தன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், ஆா்தா் உடலும் கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற சகேயுவை சனிக்கிழமை காலை கைது செய்தனா்.

விசாரணையில், ஆா்தருக்கும், சகேயு தந்தை ஜேசுதாஸூகும் நிலத்தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக ஆா்தரை சகேயு வெட்டிக் கொலை செய்ததாக சிக்கல் போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments