FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே வடமாடு எருதுகட்டு போட்டி

58 வினாடிகள் முன்பு
கமுதி அருகே வண்ணாங்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வடமாடு எருதுகட்டு போட்டியில் மாடுபிடி வீரரை தூக்கி எறிந்த காளை.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா கடந்த 18- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வடமாடு எருதுகட்டு போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், விருதுநகா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, காளைகள் ஆடுகளத்தில் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் அண்டா, குத்துவிளக்கு, கட்டில், பீரோ, மரக்கன்று உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை வண்ணாங்குளம், பம்மனேந்தல், வேப்பங்குளம், குண்டுகுளம், கோவிலாங்குளம், புதுக்கோட்டை, கமுதி இதன் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments