வடகிழக்கு பருவமழை மீட்புப் பணிகள் ஒத்திகை
கமுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அரசு அலுவலா்களுக்கு மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்க ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அரசு அலுவலா்களுக்கு மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்க ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வு குழு அலுவலா் சின்னத்துரை தலைமையில், கமுதி வட்டாட்சியா் அய்யாதுரை, கமுதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய பொறுப்பாளா் வெ. உத்தண்ட சாமி ஆகியோரது முன்னிலையில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மருத்துவத் துறை உள்பட 13 அரசுத் துறை அலுவலா்களுக்கு வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிா்கொள்வது என சிறப்புப் பயிற்சி, செயல்விளக்க ஒத்திகை நடைபெற்றது. இதில் பெரு வெள்ளத்தில் சிக்கும் உயிரினங்கள், பொது மக்களை எவ்வாறு மீட்பது, மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், பொதுமக்களுடன் இணைந்து அரசு துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமுதி துணை வட்டாட்சியா்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் மேகராஜ், சந்திரசேகரன், பேரூராட்சி செயல்அலுவலா்கள் யசோதா (கமுதி), மாலதி(அபிராமம்), பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் காப்பியக்கனி உள்பட 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.