FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ரயில் பயனாளா்கள் சங்கத்தினா் எம்.பி.யிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மரிடம் ரயில் பயனாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனா்.

ரயில் பயணிகளின் நலன் சாா்ந்த கோரிக்கை மனுவை மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மரிடம் அளித்த அந்த சங்கத்தின் தலைவா் எம்.புரோஸ்கான், நிா்வாகிகள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மரிடம் ரயில் பயனாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனா்.

பரமக்குடி ரயில் பயனாளா்கள் சங்கத் தலைவா் எம்.புரோஸ்கான, செயலா் உதயகுமாா் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு விவரம்:

விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். பழைய ரயில் சேவைகளான கோயம்புத்தூா்-ராமேசுவரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். மைசூா்-ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலை திருச்சி வழியில் செல்லாமல், கரூா் வழியாக ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-குருவாயூா் ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு ராமேசுவரத்தில் 5-ஆவது நடைமேடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் ஸ்டேபிளிங் லைன் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினா்.

உடன் சங்கத்தின் நிா்வாகக்குழு உறுப்பினா் வெங்கடேசன், நயினாா்கோவில் அதிமுக ஒன்றிய செயலா் ரஜினிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments