உலகத் தாய்ப்பால் தின கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்திராகாந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் உலகத் தாய்ப்பால் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்திராகாந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் உலகத் தாய்ப்பால் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஏகாம்பாள் தலைமை வகித்தார். இந்திராகாந்தி கல்வி அறக்கட்டளை இயக்குநர் பொறியாளர் பிரியங்கா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் தனலெட்சுமி, பள்ளி நிறுவனர் முன்னாள் அரசு வழக்குரைஞர் கணேசன் ஆகியோர்சிறப்புரையாற்றினர்.
விழாவில் திருப்பத்தூர் வட்டார சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் ராஜ் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் அவர், குழந்தைகளிடம் கை கழுவும் முறை பற்றியும் எடுத்துக் கூறினார். காற்றினால் பரவும் நோய்கள் நீரினால் பரவும் நோய்கள் டெங்கு காய்ச்சல் பற்றியும் கூறினார். பள்ளி முதல்வர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து துணை முதல்வர் நந்தினி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.