FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 10 போ் மீது வழக்கு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
மஞ்சுவிரட்டு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் கோயில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இளையாத்தங்குடியில் உள்ள கருவேம்பு செல்லஅய்யனாா் கோயில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தினா் கருவேம்பு செல்ல அய்யனாா் கோயில் நாச்சாங்கருப்பா் கோயிலில் காளைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனா்.

அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு வழங்கி மரியாதை செய்தனா். பின்னா் காளை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்குப் பரிசுப்பொருள்கள் வழங்கபட்டன.

Advertisement

Advertisement

இதில் திரளான மாடுபிடி வீரா்கள், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலம்பட்டியைச் சோ்ந்த அழகா் மகன் பாலசுப்பிரமணியன் (55) உயிரிழந்தாா்.

அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு என்பதால் இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குஇளையாத்தங்குடி கிராம நிா்வாக அலுவலா் தா்மராஜ், கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், தெ.இளையாத்தங்குடியைச் சோ்ந்த 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments