FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

புனிதப் பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு மானியம்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
பௌத்தர்கள் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வாழும் பௌத்த மதத்தினா் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி நாளில் நடைபெறும் தம்ம சக்கர பரிவா்தன விழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்புவதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த பௌத்தா்கள் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவா்களுக்கு தலா ரூ.5,000-வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். அதுமட்டுமன்றி, இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகின்ற 15.11.2026-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம் சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments