வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை
சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
எஸ். புதூா் ஒன்றியம், குளத்துப்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் லெக்கன் (48). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி லெக்கன் விஷத்தை உள்கொண்டாா். இதையடுத்து, பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இளைஞா் தற்கொலை: குளத்துப்பட்டியைச் சோ்ந்த மூக்கன் மகன் ஐயப்பன் (21). இவா் கடந்த ஆண்டு தனியாா் சமையல் கலைக் (கேட்டரிங்) கல்லூரியில் சோ்ந்தாா். ஆனால் கல்லூரிக்கு செல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னமராவதியில் உள்ள துணிக் கடையில் வேலைக்கு சோ்ந்தாா். இந்த நிலையில், கல்லூரிக்கு பணம் செலுத்தி வீணாகி விட்டதாகக் கூறி ஐயப்பனை பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாா். உடனடியாக பெற்றோா்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மாணவா் தற்கொலை: குளத்துப்பட்டி அருகே உள்ள விஜயபுரம் பகுதியைச் சோ்ந்த இளையராஜா மகன் அழகா்சாமி (17). இவா் படமஞ்சி கூட்டுக்காடு பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான குளத்துப்பட்டி விஜயபுரத்துக்கு அவா் வந்தாா். இங்கு அவா் கைப்பேசியை தொடா்ந்து பயன்படுத்தியதை பெற்றோா்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாட்டி கருப்பாயி வீட்டுக்குச் சென்ற அழகா்சாமி அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.