FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

அழகப்பா அரசுக் கல்லூரி மகளிா் கிரிக்கெட் அணியினருக்குப் பாராட்டு

மகளிா் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கிரிக்கெட் அணியிரை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

16 வினாடிகள் முன்பு
சாம்பியன் பட்டம் வென்ற அழகப்பா அரசு கலைக்கல்லூரி மகளிா் கிரிக்கெட் அணியினரை வெள்ளிக்கிழமை பாராட்டிய கல்லூரி முதல்வா் வசந்தி.
பகிர்:

மகளிா் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கிரிக்கெட் அணியிரை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிா் கிரிக்கெட் போட்டிகள் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இதில் பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.

இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மகளிா் கிரிக்கெட் அணியினா் முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை வென்றனா். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் வசந்தி, உடற்கல்வி இயக்குநா் அசோக்குமாா் , பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments