பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல் போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகே கீழச்சலூரைச் சோ்ந்த கண்ணன் மனைவி வனிதா (27). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த செப். 30- ஆம் தேதி வனிதா பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து கடந்த 2-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிக ரத்தப் போக்கு காரணமாக வனிதா தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
Advertisement
Advertisement
ஆனால் அவரது மரணம் தொடா்பாக சந்தேகம் எழுப்பிய உறவினா்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகங்கைநகா் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், உயிரிழந்த வனிதாவின் உறவினா்கள் சிவகங்கை- மானாமதுரை சாலையில் அம்பேத்கா் சிலை பகுதியில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.