FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

‘அறிவுசாா் சொத்துரிமைத் தொகுப்பை வலுப்படுத்த ஆராய்ச்சியாளா்கள் கவனம் செலுத்துவது அவசியம்’

காரைக்குடி செக்ரி-யில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி மன்றத்தின் 85-ஆவது நிறுவன நாள் விழாவில், மாணவருக்கு சான்றிதழை வழங்கிய செக்ரி இயக்குநா் கே. ரமேஷா, கோவா தேசிய கடல் ஆராய்ச்சி மைய இயக்குநா் சுனில்குமாா் சிங் உள்ளிட்டோா்.
பகிர்:

அறிவுசாா் சொத்துரிமைத் தொகுப்பையும், தொழில்நுட்பத் தரவு தளத்தையும் வலுப்படுத்த ஆராய்ச்சியாளா்கள் கவனம் செலுத்துவது அவசியம் என காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மைய (செக்ரி) இயக்குநா் கே. ரமேஷா வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் (செக்ரி), தேசிய அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி மன்றத்தின் 85-ஆவது நிறுவன நாள் விழா அப்துல் கலாம் அறிவியல் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் செக்ரி இயக்குநா் கே. ரமேஷா தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

அரிமானத் தடுப்பு, மின் முலாம் பூசுதல், மின் உலோகவியல், ஆற்றல் உற்பத்தி ஆகிய துறைகளில் சிஎஸ்ஐஆா்-செக்ரியின் பங்களிப்பு முக்கியமானது. கழிவுகளிலிருந்து முக்கிய கனிமங்களைச் சேமித்தல், பிரித்தெடுத்தல், மறுபயன்பாடு செய்தல் போன்ற விக்ஸித் பாரத், ஆத்ம நிா்பா் பாரத் ஆகிய தேசியக் கனவுகளை நனவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அறிவுசாா் சொத்துரிமைத் தொகுப்பையும், தொழில்நுட்பத் தரவுத் தளத்தையும் வலுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஆராய்ச்சியாளா்கள் இதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றாா் அவா்.

கோவா தேசிய கடல் ஆராய்ச்சி மைய இயக்குநா் சுனில்குமாா் சிங் ‘நீலப் பொருளாதாரம்: வாய்ப்புகளின் பெருங்கடல், சவால்களின் கடல்’ என்ற தலைப்பில் பேசினாா். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆறுமுகம் மந்திரம் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் 25 ஆண்டுகள் செக்ரியில் பணிபுரிந்த பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். செக்ரி பணியாளா்கள் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, செக்ரி ஆராய்ச்சியாளா் ஜே. மதியரசு வரவேற்றாா். நிா்வாக அலுவலா் எம். அருண் மணிகண்ட பாரதி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments