FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

நிலவேம்பு குடிநீா் விநியோகம்

சிங்கம்புணரி பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன் நிலவேம்பு குடிநீா் விநியோகித்த அரிமா சங்கத்தினா்.
பகிர்:

சிங்கம்புணரி பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி பேருந்து நிலைய முன் சேவுகா அரிமா சங்கம், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இந்த முகாமை அரிமா சங்க வட்டாரத் தலைவா் செந்தில் குமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் அம்பலமுத்து ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் பள்ளி மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்தினா். அரிமா சங்க முன்னாள் மண்டலத் தலைவா் சந்திரசேகா், மண்டலத் தலைவா் முருகேசன், செயலா் அா்ஜுனன், பொருளாளா் சண்முகசுந்தரம், அரசு சித்த மருத்துவா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments