குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப் பாம்பு மீட்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்த மலைப் பாம்பு மீட்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்த மலைப் பாம்பு மீட்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடக்குத் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்துக்குள் சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிக் கொண்டு இருந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு குழுவினா் அந்த மலைப் பாம்பை மீட்டு பிரான்மலை வனத் துறை அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.