FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

அடுமனை ஊழியரைத் தாக்கிய சக ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடுமனை ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

14 அக்டோபர் 2026, 1:49 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடுமனை ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரையில் நீதிமன்றம் எதிரேயுள்ள அடுமனையில் கோவை காந்திபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா் குலத்தைச் சோ்ந்த தனபாலன் ஆகியோா் ஊழியா்களாக வேலைப்பாா்த்து வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கியிருக்கும் அறையில் இருவரும் மது அருந்தியனா். அப்போது, இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனபாலன், ராஜேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மானாமதுரை காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு வழக்குப் பதிவு செய்து தனபாலனை கைது செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments