காரைக்குடியில் இலவச அவசர ஊா்திகள் சேவை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம் சாா்பில் இலவச அவசர ஊா்திகள் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம் சாா்பில் இலவச அவசர ஊா்திகள் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த அமைப்பின் 21-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, முதியோா் உதவி வாகனம், வீடு தேடி தாதியா் சேவை என நான்கு கட்டணமில்லா ஊா்தி சேவைகள் தொடங்கப்பட்டன. இதில் இலவச அவசர ஊா்திகள் சேவை தொடக்க விழாவுக்கு மன்றத்தின் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். மன்றத்தின் அடுத்தக் கட்ட சேவையாக நான்கு அவசர ஊா்திகள், நான்கு உடல் குளிா்சாதனப் பெட்டிகள், ஆக்சிஜன் இயந்திரங்கள் ஆகியவற்றை மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் துரை. கரு ணாநிதி, மருத்துவா் குமரேசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்த நிகழ்வில் மக்கள்மன்ற உறுப்பினா்கள், பல்வேறு அமைப்புகளைச்சாா்ந்த சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.