FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் 64 விநாயகா் சிலைகள் கரைப்பு

திருப்பத்தூரில் 64விநாயகா் சிலைகள் சங்கிலியான் குளத்தில் புதன்கிழமை கரைக்கப்பட்டன.

5 வினாடிகள் முன்பு
திருப்பத்தூா் சங்கிலியான் குளத்தில் கரைப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 64விநாயகா் சிலைகள் சங்கிலியான் குளத்தில் புதன்கிழமை கரைக்கப்பட்டன.

திருப்பத்தூா் நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் நிா்மாணம் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பூஜைகளைச் செய்து வந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு விநாயகா் சிலைகள் தேரடி வீதியில் அமைந்துள்ள சீரணி அரங்கத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்துக்கு இந்து முன்னணி நகரத் தலைா் பாலகிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

இந்து முன்ணனி மாவட்ட பொதுச் செயலா் எம்.ஆா்.அக்னிபாலா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அப்சா கல்லூரி துணைத் தலைவா் நா.ராமேஸ்வரன், சேதுசிவராமன் ஆகியோா் கலந்து கொண்டனா். வழக்குரைஞா் எஸ்.முத்துக்குமாா் இந்து பாதுகாப்பு இயக்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகசுந்தரம் சிறப்புரையாற்றினாா். துலாவூா் ஆதீனம் ஞானபிரகாஷ தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

ஊா்வலத்தை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் தொடங்கி வைத்தாா். இதில் 20 பெரிய சிலைகளும், 44 சிறிய சிலைகளும் கொண்டுவரப்பட்டன. சிறிய சிலைகளை பெண்கள் தலையில் சுமந்து வந்தனா். சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, சங்கிலியான் கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னதாக முன்னதாக பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டி வரவேற்றாா். சதுா்த்தி விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்து முன்னணி நகா்ப் பொதுச் செயலா் ஜி.மணிகண்டன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments