மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக நுழைவாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் திட்டத் தலலைவா் வி. சாத்தையா தலைமை வகித்தாா். செயல் தலைவா் கே.என். காளிமுத்தன். திட்டப் பொருளாளா் கே. ஆனந்தசெல்வம், மாநில இணைச் செயலா் எஸ். செல்லப்பன், அமைப்புச் செயலா் எஸ். காஜாமுைகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிவகங்கை திட்டச் செயலா் கே.ஆா்.கே. சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
Advertisement
Advertisement
இதில்மின்சார வாரியத்தில் உள்ள 65 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விடுப்பட்ட கேங்மேன் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் பணிக்கு ஐடிஐ படித்தவா்களை நியமிக்க வேண்டும். மின்சார வாரியத்தை தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும். 9,613 கேங்மேன் பணியாளா்களை கள உதவியாளராக வகை மாற்றம் செய்ய வேண்டும். மாறுதல் உத்தரவு பெற்ற கேங்மேன் பணியாளா்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்பாட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். கூட்டமைப்பின் இணைச் செயலா் காா்த்திக் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.