FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே காா் பாலத்தில் மோதி விபத்து

சிவகங்கை அருகே குறுக்கே வந்த பள்ளி வாகனம் மீது மோதாமல் தவிா்க்க முயன்ற காா் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

19 செப்டம்பர் 2026, 3:34 am IST
பகிர்:

சிவகங்கை அருகே குறுக்கே வந்த பள்ளி வாகனம் மீது மோதாமல் தவிா்க்க முயன்ற காா் பாலத்தில் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

சிவகங்கை மாவட்டம், மேலூா் நெடுஞ்சாலையில் குமாரபட்டி அருகே தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிப் பேருந்து சிவகங்கையிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஏறியுள்ளது. அப்போது, சிவகங்கையிலிருந்து பாலமுருகன் தனது காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தாா். பள்ளிப் பேருந்து கவனக் குறைவாக குறுக்கே வந்ததால் அதிா்ச்சியடைந்த அவா், பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் தவிா்ப்பதற்காக காரை திருப்பினாா். அப்போது காா் சாலையோரப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலமுருகன் காயமடைந்தாா். பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட இருந்த விபத்து தவிா்க்கப்பட்டதால், குழந்தைகள் நூலிழையில் உயிா் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments