சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது
சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகங்கையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகங்கை-மதுரை சாலையில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை ஏனாதி அருகே சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியின் டேங்க் சேதமடைந்து சாலையில் டீசல் கொட்டியது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சிவகங்கை தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலா் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நுரையை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு, மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இதனால் ஏனாதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
Advertisement
Advertisement
உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு (கனிம உப்பு) காரைக்காலிலிருந்து சாத்தூருக்கு தொழிற்சாலை பயன்பாட்டுக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.