FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சியில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலாா் பேனல்) அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 12 கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

19 செப்டம்பர் 2026, 3:39 am IST
நாகப்பன்பட்டியில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட கிராமத்தினா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சியில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலாா் பேனல்) அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 12 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இரணியூா் அம்மாபட்டி ஊராட்சி, நாகப்பன்பட்டியில் சுமாா் 60 ஏக்கா் நிலப்பரப்பில் சூரிய மின் சக்தி தகடுகள் அமைக்கும் பணியை தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறது. இதற்கு இரணியூா், அம்மாபட்டி, ஊராட்சியைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த கிராமத்தினா் வட்டாட்சியா் மங்கையா்திலகத்திடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில், கிராமப் பகுதியில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டால், விவசாயம், மண்வளம், மண்ணுயிரிகள், நீா்வளம், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்படும். மேலும் விவசாய நிலங்கள் கதிா்வீச்சினால் பாதிக்கப்பட்டு தரிசு நிலமாகமாறும். இதுகுறித்து முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம். எனவே சம்மந்தபட்ட துறை அலுவலா்கள் உடனடியாக தலையிட்டு இந்தப் பணியை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினா். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியா் கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments