FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சாலையை கடக்க முயன்ற ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், நாகமங்கலம் பகுதியில் திங்கள் கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற ஓட்டுநா் காா் மோதி உயிரிழந்தாா்.

23 செப்டம்பர் 2026, 4:54 am IST
உயிரிழந்த ராகுல் .
பகிர்:

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், நாகமங்கலம் பகுதியில் திங்கள் கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற ஓட்டுநா் காா் மோதி உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகே படமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ராகுல் (28) ஓட்டுநா். இவா், மதுரையிலிருந்து திருச்சிக்கு திங்கள் கிழமை சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நாகமங்கலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி முகமது அப்துல்லா ஓட்டிச் வந்த காா் ராகுல் மீது மோதியதால் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த புழுதிபட்டி போலீஸாா் உடலைக் கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து புழுதி பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments