FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

லஞ்சம் : மானாமதுரை நகராட்சி பொறியாளா் உள்பட இருவா் கைது

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் சாலை ஒப்பந்த திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்க, ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன், அவரது வாகன ஓட்டுநா் சேதுபதியை செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

23 செப்டம்பர் 2026, 4:53 am IST
கைது
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் சாலை ஒப்பந்த திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்க, ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன், அவரது வாகன ஓட்டுநா் சேதுபதியை செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 4 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்க நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன் ரூ. 4 லட்சம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் தர விரும்பாத ஒப்பந்ததாரா் இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அவா்களது அறிவுறுத்தலின்பேரில், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் இருந்த பட்டுராஜனிடம் ஒப்பந்ததாரா் ரசாயனம் தடவிய ரூ. 2 லட்சத்தை கொடுத்தாா். லஞ்சப் பணத்தை தனது வாகன ஓட்டுநா் சேதுபதியிடம் கொடுத்து ஜீப்பில் வைக்குமாறு கூறினாா். அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. தா்ம ராமு தலைமையிலான ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பட்டுராஜனைப் பிடித்து லஞ்சப் பணத்தைக் கைப்பற்றினா். பின்னா் பட்டுராஜன், சேதுபதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments