FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆண்டிபட்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி அருகே ரெங்கநாதபுரம் முதல் சமத்துவபுரம் வரையிலான தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆண்டிபட்டி அருகே ரெங்கநாதபுரம் முதல் சமத்துவபுரம் வரையிலான தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தார் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இச்சாலையை சீரமைக்க ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு கற்கள் போடப்பட்டன. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் தார் சாலை போடப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments