கம்பத்தில் தடையை மீறி ஊர்வலம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் 26 பேர் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை தடையை மீறி ஊர்வலமாக சென்று ஆர்பாட்டம் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை தடையை மீறி ஊர்வலமாக சென்று ஆர்பாட்டம் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலையில் நடைபயணம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை மாலை பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயா, லெனின், ஜெயராஜ், பன்னீர்வேல் உள்பட 26 பேர் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று ஏ.கே.ஜி. திடலில் ஆர்பாட்டம் செய்ய முயன்றனர் போலீஸாரின் அனுமதியை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றவர்கனை துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி தலைமையிலான போலீஸார் காந்திசிலை திடலில் தடுக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சிலர் போலீஸார் பிடியில் இருந்து தப்பி, கம்பம் குமுளி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீஸார் 3 பெண்கள் உட்பட 26 பேரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.