FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வங்கி காசோலைகளை பயன்படுத்தி  ரூ.2 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது 

பெரியகுளத்தில் வீட்டு அடமான கடன் தொகையை பெறுவதற்கு அளித்த காசோலைகளை பயன்படுத்தி  ரூ.2 லட்சம் மோசடி செய்த தந்தை மற்றும் மகனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 12:57 am IST
பகிர்:

பெரியகுளத்தில் வீட்டு அடமான கடன் தொகையை பெறுவதற்கு அளித்த காசோலைகளை பயன்படுத்தி  ரூ.2 லட்சம் மோசடி செய்த தந்தை மற்றும் மகனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பெரியகுளம், வடகரை அனுமார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். இவர், கடந்த 2018, பிப்ரவரி மாதம் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடன் தொகையை வங்கிக் கணக்கு மூலம் தவணை முறையில் பெற்றுக் கொள்ளுமாறு தனியார் வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 
அதன்பேரில் நிதி நிறுவன ஊழியர்கள் ராஜாங்கம் மகன் மோகன், மன்மதன் ஆகியோர் காமராஜ் பெயரில் பெரியகுளம் பெடரல் வங்கியில் கணக்கு தொடங்கிக் கொடுத்துள்ளனர். அந்த வங்கியில் காமராஜ் பெயரில் ரூ.4 லட்சத்தை தனியார் நிதி நிறுவனம் வரவு வைத்துள்ளது. 
அந்த தொகையை காமராஜ் தவணை முறையில் மட்டுமே எடுக்க முடியும் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக காமராஜிடமிருந்து, அவர் கையெழுத்திட்ட 11 காசோலைகளை வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இந்நிலையில் 8 காசோலைகளை பயன்படுத்தி, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் காமராஜ் வங்கிக் கணக்கில் இருந்து  ரூ.2 லட்சத்தை எடுத்து  கொடுத்துள்ளனர். மீதமுள்ள 3 காசோலைகளை பயன்படுத்தி காமராஜுக்கு தெரியாமல், மேலும் ரூ.2 லட்சத்தை தனியார் வங்கி ஊழியர் மோகனின் தந்தை ராஜாங்கம் என்பவரது வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக காமராஜ் தன்னை தனியார் வங்கி ஊழியர்  மோசடி செய்துவிட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம்  புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து உத்தமபாளையம் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த மோகன், அவரது தந்தை ராஜாங்கம் ஆகியோரை கைது செய்தனர். மன்மதனைதேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments