FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போடியில் காயங்களுடன் இளம்பெண்  சடலமாக மீட்பு: போலீஸார் விசாரணை

போடியில் கழுத்தில் காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை புதன்கிழமை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

போடியில் கழுத்தில் காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை புதன்கிழமை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி முத்துப்பாண்டி தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் வீரக்குமார் (32). இவருக்கும், போடி புதூரைச் சேர்ந்த நாகராஜன் மகள் நதியாவுக்கும் (25), கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 
இந்நிலையில் வீரக்குமார் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
அதே போல் புதன்கிழமையும் வீரக்குமார் தகராறு செய்துள்ளார். இதனை நதியா கண்டித்தாராம். 
இந்நிலையில் நதியா மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது தந்தை நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது நதியா கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து நாகராஜன் போடி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் விக்னேஷ்பிரபு மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, நதியாவின் சடலத்தை கைப்பற்றி, அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments