சிறுபான்மையினர் தின விழா
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், சிறுபான்மையினர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம். சாந்தி, சிறுபான்மையினர் நல கண்காணிப்பாளர் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.