தேனியில் கிட்டங்கிக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தனியார் கிட்டங்கிக்குள் புதன்கிழமை புகுந்த நாலரை அடி நீளமுள்ள
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தனியார் கிட்டங்கிக்குள் புதன்கிழமை புகுந்த நாலரை அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே துணிகளை அடுக்கி வைப்பதற்கான தனியார் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இக்கிட்டங்கியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதை பார்த்த ஊழியர்கள் தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், நாலரை அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். பின்னர் பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அல்லிநகரம் வீரப்பஅய்யனார் மலை வனப் பகுதியில் விடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.