தேவாரத்தில் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
தேவாரம், மேற்குமலையடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள்
தேவாரம், மேற்குமலையடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவாரம், மேற்கு மலையடிவாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக விவசாய நிலங்களுக்குள் ஒற்றை யானை புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விளை நிலங்களுக்குச் செல்ல விவசாயத் தொழிலாளர்கள் தயங்குகின்றனர். இந்நிலையில், தேவாரத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியராஜன் தலைமையில் விவசாயிகள் சிலர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர். அங்கு அவர்கள், அந்த மக்னா யானையை வனப் பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.