தேனி கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் புதன்கிழமை ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் புதன்கிழமை ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் ஆர்.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.நாகரத்தினம் முன்னிலை வகித்தார்.
ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு, நோய் அறிகுறி, சிகிச்சை முறை ஆகியவை குறித்து ரெட் ரிப்பன் கிளப் மேலாளர் முகமது பரூக், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதர நிலைய சுகாதார அலுவலர் முத்துலட்சுமி,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரெட் ரிப்பன் கிளப் கவுன்சிலர் எம்.ராஜா ஆகியோர் பேசினர்.
ஏற்பாடுகளை கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் மருதராஜ் செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.