பாரதி தரிசனம் நூல் வெளியீட்டு விழா
பெரியகுளத்தில் பாரதி தரிசனம் நூல் வெளியீட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளத்தில் பாரதி தரிசனம் நூல் வெளியீட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் பி.சி.சிதம்பர சூரியவேலு தலைமை வகித்தார். நண்பர்கள் இலக்கிய வட்டத்தலைவர் மு.அன்புக்கரசன் வரவேற்றார். தேனி மைய நூலகர் லெட்சுமணப்பெருமாள் முன்னிலை வகித்தார்.
பெரியகுளம் வழக்குரைஞர் சங்கத்தலைவர் பி.சந்திரசேகரன் பாரதி தரிசனம் நூலை வெளியீட்டார்.
நூலாசிரியரும், கலை நன்மணி விருதுபெற்றவருமான கள்ளிப்பட்டி சு.குப்புசாமி ஏற்புரையாற்றினார். கல்விக்கண் அறக்கட்டளை தலைவர் ஆர்.தேவேந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.